இரு தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு போரை முன்னெடுக்கும் படையினருக்கான ஆதரவை அனைவரும் தரவேண்டும் - சரத்பொன்சேகா

இலங்கை பாதுகாப்பு படையினர் கடந்த 20 வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே யுத்தத்தை முன்னெடுக்கும் படையினருக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என சிறீலங்காத் தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி அஸ்கிரி மாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கை ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலுக்கமைய பாதுகாப்புப் படையினர் விரைவில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பர் என அஸ்கிரி மாநாயக்க தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
யுத்த முன்னெடுப்புகளில் முன்னாள் தளபதிகள் கொழும்பிலிருந்தே படையினரை வழிநடத்துவார்கள் எனவும் தற்போது படைத்தளபதிகள் எதிரிகளுக்கு எதிராக யுத்த முனைகளில் போரிட்டு வருவதாகவும் அஸ்கிரி மாநாயக்க தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.