இலண்டனில் கொலையுடன் தொடர்புபட்ட இலங்கை இளைஞர்கள் நால்வருக்கு ஆயுள் தண்டனை

தமிழீழப் போராட்டத்தின்மூலமாக கற்றுக்கொண்ட தமது பாடத்தினை புலம்பெயர் நாடுகளிலும் அரங்கேற்றும் அகதித் தமிழன் சமுராய் கத்தியைப் பயன்படுத்தி நபர் ஒருவரின் தலைப் பகுதியை வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். மேற்படி பயங்கரவாதிகளான தமிழ் இளைஞர் குழுவொன்றுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏழு பேரைக் கொண்ட குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
20 வயதுடைய இளைஞர் ஒருவரை கத்தி, மரத்திலான ஆயுதங்கள் என்பனவற்றை கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி ப்ரமெர் அவனியூவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளிகள் என நிரூபிகப்பட்ட குணரட்னம் (32) தவபாலசிங்கம் (21) ஆகியோருக்கு 12 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையும் சிவநேஸ்வரனுக்கு (20) 8 வருடத்திற்கு குறையாத ஆயுள் தண்டனையும், பிரதீபனுக்கு (24) 10 வருடத்திற்கு குறையாத ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.