ஓராண்டு நிறைவுபெறும் கிழக்கு மாகாணத்தின் விடுதலையும் அப்பிரதேசத்தின் அபிவிருத்திபற்றிய ஊடக ஊதுகுழல்களும்

vellupillai-prabhakaran-1_16.jpgR__Sampanthan_2.jpgகிழக்கு மாகாண தமிழ்மக்களின் நாசகாரிகளும், எதிரிகளும் விபரம் பின்னால்
கிழக்கு மாகாணம் என்னும் வார்த்தையினை உச்சரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள்
இன்றைய ஜனாதிபதியான திரு ராஜபக்ஸ அவர்கள் அப்பிரதேசத்தில் வாழும் மக்களை ஏமாற்றிவிட்டாதாகவும், அவரின் கபட நாடகத்திற்கு தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளும் துணைபோய்விட்டதாகவுமே பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். முதலில் கிழக்கு மாகாணம் என்பது எப்பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது என்பதனை மேற்படி விமர்சனங்களையும், பொய்யுரைகளையும் முன்வைப்பவர்கள் அறிவார்களா? கிழக்கு மாகாணம் பதவியா முதல் லகுகல வரையான 30 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசமாகும். அவற்றில் 3 மாவட்டங்களும அதற்கான அரசாங்க அதிபர்களும், ்10 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் தமிழ் மக்கள் பெரும்பாலானவர்களாகவும், ஏனைய 10 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராகவும் எஞ்சிய 10 உதவி அரச அதிபர் பிரிவுகளில் 07 பிரிவுகளில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகவும் ஏனைய அரச அதிபர் பிரிவுகளான குச்சவெளி, தம்பலகாமம், மூதூர் ஆகிய 03 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் கலந்து வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி 30 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் மட்டுமே அபிவிருத்தி அடையாதநிலையில் அழிவுகளுக்கு உட்படுத்தப்பட்டு, அகதிகளையும் உருவாக்கி அனாதரவாக காட்சியளிக்கின்றது. இதற்கான காரணகர்த்தாக்கள் யார்? அரசாங்கமா? அன்றி ஆயுதவன்முறையினை மேற்கொண்ட அராஜகவாதிகளான பாஸிஸப் புலிகளும் அதன் பக்தர்களுமான புலம்பெயர் புலிகளா?

1974 யூன் மாதம் 5 ந் திகதி மேற்கொள்ளப்பட்ட கோப்பாய் வங்கிக் கொள்ளையுடனும், 1975 யூலை 25 ந் திகதி மேற்கொள்ளப்பட்ட யாழ் நகர பிதாவான திரு அல்பிரட் துரையப்பா அவர்களின் படுகொலையுடனும் முனைப்புப் பெற்ற பயங்கரவாதம் கிழக்கில் ஜனநாயக நடைமுறைகளுக்கு ஆப்பு வைத்து எமது தமிழ் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு விலங்கிட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தேர்வு ஆயுதவெறியின்மூலம் 1978 ஜனவரி மாதம் 27 ந் திகதி அன்றைய பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினரான திரு கனகரெட்ணம் அவர்களின்மூலம் அரங்கேற்றிய பாஸிஸப் புலி கிழக்கு மாகாணத்தின் தமிழ் அரசியல்வாதிகள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தது. அப்படுகொலையின் பின்னர் கிழக்கு மாகாண தமிழ் மக்களை பிரதிநிதித்திப்படுத்திய பிரதிநிதிகள் எவரும் தமது மக்களுக்கான பணிகளை சுதந்திரமாக நிறைவேற்றமுடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய யாழ் மேலாதிக்க ஆயுதக்கும்பல்களும், அரசியல்வாதிகளும் 1989 ல் கிழக்கிற்கு படையெடுத்தனர். 1989 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் யாழ் குடாநாட்டிலிருந்து பாஸிஸப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட ஆயுத அமைப்புக்களும், தமிழர்விடுதலைக் கூட்டணியும் இணைந்து கிழக்கில் போட்டியிட்டதன்மூலம் வடமாகாணத்தைச் சேர்ந்த ஆயுத அமைப்புக்களின் ஆக்கிரமிப்பும் கிழக்கில் காலூன்றியது.

தொடர்ந்து 1994 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பாஸிஸப் புலியின் ஆதிக்கம் கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நிலைக்கு வழர்ச்சி பெற்றது. இந்நிலைமைகளுக்கமைய 1989 ம் ஆண்டு முதல் கடந்த 19 ஆண்டுகாலம்வரை எமது மக்கள் பாஸிஸப் புலியின் கோரப்பிடிக்குள் சிக்கியமையினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அற்றவர்களாக ஆக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. (பிச்சைக்காரன் தனது புண்ணுக்கு வைத்தியம் செய்தால் அவனால் தொடர்ந்து பிச்சை பெறமுடியாது.) இதுவே புலியின் தாரகமந்திரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு கிழக்கின் அபிவிருத்திக்கு தடைபோடப்பட்டது.

இந்நிலையில் கிழக்கு மாகாணம் மஹிந்தவின் அரசினால் அபிவிருத்தி செய்யப்படவில்லை எனவும் அதனை பாஸிஸப் புலிகளிடம் கையளித்தால் பொன்கொளிக்கும் பூமியாக அது மாற்றப்பட்டுவிடுமென இன்று எமது மக்களுக்கு ஆலோசனை கூறமுற்படும் புலியும், அதன் ஆதரவாளர்களான கிழக்கு மண்மீதான ஆக்கிரமிப்பிற்கு கங்கணங்கட்டி நிற்கும் முகமூடியணிந்த புதிய புலிகளும், புலியின் புலம்பெயர் பக்தர்களுக்கும் நாம் தெரிவிப்பது. முதலில் கிழக்கு மாகாணத்தின் வரைபடத்தினை படியுங்கள், அதன்பின்னர் அபிவிருத்தியடையாத பிரதேசங்களை கணடறியுங்கள் பின்னர் அதற்கான காரணகர்த்தாக்கள் யார் என்பதை புரியுங்கள் விடைக்கு பொறுப்பானவர்கள் இன்று விமர்சனங்களை முன்வைப்ப்பவர்களே என்பது விடையாகும்.

1978 முதல் 2007 வரை 29 ஆண்டுகள் பயங்கரவாதிகளின் அராஜகத்திற்கு அடிமைகளாக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 1989 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை 19 ஆண்டுகள் தமது நலன்களை மேற்கொள்வதற்கான பிரதிநிதிகள் அற்ற நிலையிலும் அத்துடன் 2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ந் திகதி இடம் இயற்கை அழிவான சுனாமியின் கோரவெறியில் தமது உடமைகளையும், உறவுகளையும் பலிகொண்ட கிழக்குவாழ் தமிழ் மக்கள் இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் வாழும் மக்கள் அனுபவிக்காத துன்ப துயரங்களையும் பொருட்சேதங்களையும் எதிர்கொள்வதற்கு ஆளாக்கப்பட்டார்கள் இந்நிலையில் கிழக்கு மாகாண மக்களைப்பற்றி இன்று மட்டும் முதலைக் கண்ணீர்வடிக்க முன்வந்திருக்கம் கனவான்களின் பின்னணி என்ன?

கிழக்கில் வாழும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் நலன்களில் அந்தந்த இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் போட்டிபோட்டுக்கொண்டு சேவையாற்றம் நிலையில் 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கிழக்கின் 06 பிரதிநிதிகளும் எங்கு சென்றுள்ளார்கள் என்னும் வினாவினை விடுப்பதற்கு வக்கற்ற விமர்சகர்கள் ஏன் மஹிந்த ராஜபக்ஸமீதும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர்மீதும் குற்றம்காண முனைகின்றீர்கள். பிரபாகரனின் பொதிசுமக்கும் கோவேறு களுதைகளான தமிழ் கூட்டமைப்பினரிடம் வினா விடுக்க நீங்கள் முன்வந்தால் புலியின் ஆயுதம் உங்களைப் பலிகொண்டுவிடும் என்னும் அச்சமா? மனிதாபிமானமுள்ள மகான்களே உங்கள் மனச்சாட்சியிடம் வினா விடுங்கள் பதில் எதுவாகுமோ அதனையே எற்றுக்கொள்ளுங்கள். மீண்டும் கூறுகின்றோம் தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்கள் தவிர்ந்த கிழக்கு மாகாணம் அபிவிருத்தியடைந்துள்ளது. அதனை அறிய விரும்புவோர் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களை சென்று அவதானியுங்கள்.

முதலைக் கண்ணீர் வடிக்கும் ஊதாரி ஊடகங்கள்

விடுதலைப் புலிகளிடம் இருந்து கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு ஒராண்டு நிறைவு: இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை -பி.பி.சி.

கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட வெற்றியை கிழக்கின் உதயம் எனும் பெயரில் இலங்கை அரசாங்கம் கொண்டாடி ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள போதும் கிழக்கு மாகாணம் இன்னமும் வழமைநிலைக்குத் திரும்பவில்லை என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கின் வெற்றியை இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் திகதி பெரும் விமரிசையாக சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடியிருந்தது. இதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்ற குழுவைச் சேர்ந்த ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் அரசாங்கம் நியமித்திருப்பதாக பி.பி.சி. செய்தி குறிப்பிடுகிறது. கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாக மீட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதும்இ கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதுடன் ஆங்காங்கே பாதுகாப்புத் தரப்பினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது. “வடபகுதிக்குச் சென்று விடுதலைப் புலிகளிடம் பயிற்சிபெற்றவர்கள் ஊடுருவியிருக்கலாம். தமிழ் மக்கள் மீது பாதுகாப்புத் தரப்பினருக்கு இன்னமும் சந்தேகம் உள்ளது” என மட்டக்களப்புவாசி ஒருவர் பி.பி.சிக்கு கூறியுள்ளார்.

இதுபோன்ற பல அறிக்கைகளை புலியின் விபச்சார ஏடுகளும் வெளியிட்டுள்ளன.

கிழக்கு மாகாணம் மீட்டெடுக்கப்பட்டு ஒரு வருடம் கழிந்த நிலையிலும் அங்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவுகின்றது. புலியின் ஊடகம்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்குப் பிராந்தியத்தைப் படையினர் மீட்டெடுத்து ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்னமும் பூரணமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு வாழ் மக்கள் இன்னமும் அச்சத்துடனும்இ பீதியுடனும் வாழ்ந்து வருவதாக ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கை மீட்டெடுத்து ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில் இன்னம் பிரதான நகரங்கள் மற்றும் கிராமங்களில் அதிக எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. குறிப்பாக கிழக்கு வாழ் தமிழர்களைப் படையினர் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பார்ப்பதாகக் கிழக்கு வாழ் தமிழ் பிரஜையொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தனியார் நிலங்களில் முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் குறித்த நிலத்திற்கு எவ்வித நட்டஈட்டுப் பணத்தையும் வழங்கவில்லை எனக் கிழக்கு வாழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் தொடர்ந்தும் கிழக்கில் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது