இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு சென்றடைந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றப் பிரதி நிதிகள் முக்கிய சந்திப்புகளை நடத்த வுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. பிரித்தானியாவின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும் தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினருமான றொபேட் எவான்ஸ் தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பை சென்றடைந்தனர். இவர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருப்பார்கள்.தங்கியிருக்கும் நாள்களில் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பட் டோரையும் சந்திக்கவுள்ளனர்.அத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனையும் சந்திக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.