தமிழ் நடிகர்களில் முதன்முறையாக ரஜினிகாந்துக்கு அமெரிக்காவில் பிரம்மாண்ட வினயல் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன் தெலுங்கில் கதாநாயகடு என்ற பெயரில் வெளியாகிறது.
இப்படம் அமெரிக்காவில் ஆகஸ்ட் 1&ம் திகதி திரைக்கு வருகிறது. இதற்காக இப்படம் திரையிடப்படும் அமெரிக்க தியேட்டர்களுக்கு வெளியே 25 அடி உயரத்தில் குசேலன் படத்தில் ரஜினி இடம்பெறும் காட்சிகள் கட் அவுட்டுகளாக வைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் படம் திரைக்கு வரும் முன் அமெரிக்க நகரங்களில் அப்படத்தின் ஹீரோவுக்கு கட் அவுட் வைக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இதுகுறித்து குசேலன் படத்தின் அமெரிக்க வினியோகஸ்தர் ஜெயவேல் முருகன் கூறும்போது, ‘‘அமெரிக்காவில் தமிழ்ப் பட ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
ரஜினிக்கு இங்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர்களை ஈர்க்கும் விதத்தில் ரஜினியின் வினயல் கட் அவுட்டுகளை இங்கு வைத்திருக்கிறோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்கர்கள் கூட பலர் படம் எப்போது திரைக்கு வருகிறது என என்னிடம் கேட்கிறார்கள்’’ என்றார்.