சார்க் மாநாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புலிகள் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க இருப்பதாக அறிவித்திருந்தனர்.நேற்று நள்ளிரவு வெளியாகிய இந்த அறிவித்தலில் ஜுலை 26 முதல் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையிலான பத்து தினங்கள் இந்தப் போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என புலிகளின் அரசியல்துறை தெரிவித்திருந்தது. புலிகளின் இதபோன்ற பல திருவிளையாடல்களை ஏற்கனவே கண்டறிந்தவிட்ட அரசாங்கம் போர்நிறுத்தமல்ல நிபந்தனையற்ற பேச்சவார்த்தைக்கு புலிகள் தயாரென அழைப்பு விடுத்தாலும்கூட அரச படைகளின் வடக்குமீதான மீட்புப்பணி நிறுத்தப்படமாட்டாதென ராணுவத் தளபதியான சரத் பொன்சேகா உறுதியாக நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் மகாநாட்டு நிகழ்வின்போது தாம் போர் நிறத்தத்தினை கடைப்பிடிப்பதாக அறிவிப்பதன்மூலம் அந்நாடுகளின் ஆதரவினையும், அனுதாபத்தினையும் தமக்கு சாதகமாக பயன்படுத்த முடியுமென புலிகள் கருதிய நிலையிலேயே இந்த ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்ததாகவும் அதனை அரசு மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளின் முக்கிய பயிற்சித் தளம் மீது இன்று காலை விமானத் தாக்குதல்
முல்லைத்தீவு உடயார்கட்டுக்குளம் பகுதியில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்கும் முகாம்கள் மீது விமானப் படையின் ஜெட் ரக விமானங்கள் இன்று காலை 8.15 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. உடயார்கட்டுக்குளம் பகுதியிலேயே புலிகளின் முக்கிய பயிற்சி முகாம்கள் இருப்பதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இப்பகுதியில் இன்று காலை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இத்தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் இத்தாக்கதலின்போது 22 புலிகளின் தற்கொலைப் படையினர் பலியானதாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது
இதேவேளை, யாழ். சரசாலி பகுதில் கண்ணிவெடியொன்றில் சிக்கி இராணுவ வீரர் ஒருவர் நேற்று பிற்பகல் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது