நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்., அரசுக்கு வெற்றி ஆதரவாக 275; எதிராக 256-- 19 மேலதிக வாக்குகளால் அரசு வெற்றி

வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பிரதமா திரு மன்மோகன் சிங அவர்கள் உரையாற்றுவதனை இங்கு காணலாம்்

அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கட்சிமாறி வாக்களித்தவர்களும், வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்களும்

அரசுக்கு ஆதரவு : 275

கட்சி மாறி வாக்களித்தவர்கள் : 14

பிஜேபி-5, பிஜு ஜனதா தள்-1, தெலுங்கு தேசம்-1, மதச்சார்பற்ற ஜனதா தள்-1, ஐக்கிய ஜனதா தள்-1, மதிமுக-2, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி-1, நாகா விடுதலை கட்சி-1, தேசிய மக்கள் முன்னணி-1.

அரசுக்கு எதிர்ப்பு: 256

கட்சி மாறி வாக்களித்தவர்கள்: 7
சமாஜ்வாதி 6, காங்கிரஸ்-1.

புறக்கணித்தவர்கள்-10

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, லோக்சபாவில் வாக்குச்சீட்டு முறைப்படி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும் எதிராக 256 வாக்குகளும் கிடைத்தன. முன்னதாக நடந்த எலக்டரானிக் வாக்குப்பதிவில் அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. 2 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேச எழுந்ததுமம் எதிர்கட்சியினர் எழுந்து நின்று கூச்லிட ஆரம்பித்தனர். இதனால் பிரதமரின் பேச்சை எவரும் கேட்க இயலாத நிலை உருவானது. உடனே பிரதமர் தனது பதிலை சபாநாயகரிடம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். முதலில் குரல் வாக்கு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எலக்ட்ரானிக் முறை வாக்கெடுப்பு நடந்தது. பின்னர் வாக்கச்சீட்டு முறையிலும் வாக்கெடுப்பு நடந்தது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றதால் பிரதமர் மன்மோகன் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என கோரப்பட்டதை அடுத்து பாராளுமன்றம் கூட்டப்பட்டது. நேற்றும் இன்றும் நடந்த 2 நாள் விவாதத்தில் தலைவர்களின் பேச்சு அனல் பறந்தது. முதல் நாளில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி , அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.

இரண்டாம் நாள் விவாதம் துவங்கியதும் சிதம்பரம் பேசியதாவது : அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு எப்போதுமே வெளிப்படையாகவே இருந்துள்ளது. ஐ.மு., கூட்டணியின் தனது நான்கு ஆண்டு காலத்தில் நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரைக்கும் எந்த ஒரு கட்சியும் இந்த அளவு நலத்திட்டங்களை ஏற்படுத்தியதில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்கவில்லை என்று கூறும் தேசிய முற்போக்கு கூட்டணியினர் அந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் இடதுசாரிகளுடன் இணைந்து மத்திய அரசை எதிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை. மன்மோகன்சிங் அரசு இந்தியா அணுசக்தியை காரணம் காட்டி சர்வதே அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதை அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்கா கட்டுப்படுத்தும் நிலைமையை ஏற்படுத்தாது. மாறாக இந்தியாவின் நலனுக்கே வழிவகிக்கும். இந்தியா பொருளாதார வல்லமை கொண்ட நாடாக பிரகாசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதால் இது நனவாகும். இந்தியா அணுசக்தியை பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

பொதுசெயலாளர்களில் ஒருவரான ராகுல் காந்தி பேசியதாவது: ஒரு லோக்சபா உறுப்பினராக பேசுவதை விட, இந்தியனாக பேசுவதையே விரும்புகிறேன். இந்தியா, எரிசக்தி தேவையில் உள்ளது. எரிசக்தி, வறுமை பிரச்சினையுடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறது. எனவே எரிசக்தி தேவை பூர்த்தி செய்யப்பட்டால் நாட்டில் வறுமை ஒழிக்கப்படும் என்றார்.

விவாதம் நடந்து கொண்டிருந்தபோது பா.ஜ., எம்.பி.,க்கள் சபாநாயகர் முன்பு பணத்தை கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டி கட்டுக்கட்டாக பணத்தை லஞ்சமாக சமாஜ்வாடி கட்சியினர் கொடுத்தனர். என குற்றம்சாட்டினர். இதனையடுத்து சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சபையை நடத்த முடியாததால் துணை சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார்.

பின்னர் மீண்டும் சபை 6 மணிக்கு கூடியது. தொடர்ந்து சபையில் பேசிய சபாநாயகர் சோம்நாத்சட்டர்ஜி 6.30 க்கு சபை கூடும் எனவும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் விவாதத்தின் மீது பதில் அளிப்பார். பின்னர் 7.15 க்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.அதற்கமைய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகால இந்திய அரசியல் வரலாற்றில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற 7-வது பிரதமர், மன்மோகன்சிங்

கடந்த 29 ஆண்டு கால வரலாற்றில், பாராளுமன்றத்தில் 10 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று இருக்கிறது. இவற்றில் அந்த நேரத்தில் பதவியில் இருந்த அரசுகள், 6 முறை வெற்றி பெற்று உள்ளன. 2 பிரதமர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். 2 பிரதமர்கள் பதவி விலகி இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் நேற்று நடந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில், மன்மோகன்சிங் வெற்றி பெற்று இருக்கிறார். 30 ஆண்டுகால இந்திய அரசியலில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற 7-வது பிரதமர் இவர்.

முதன் முதலாக 1979-ம் ஆண்டு, ஜனதா கட்சி உடைந்தபோது, சரண்சிங் நம்பிக்கை வாக்கு கோரினார். அவருக்கு போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லை. எனவே அவர், சபைக்கே வராமல், பதவி விலகி விட்டார்.

1989-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய பிரதமர் வி.பி. சிங், பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். ஆனால் அடுத்த ஆண்டில் அவர் பதவி விலகி விட்டார். வி.பி.சிங் பதவி விலககாரணம், காங்கிரசும், பா. ஜனதாவும் கைகோர்த்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.பி. சிங்கை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சந்திரசேகர், 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். ஆனால் 5 மாதத்தில் அவர் ராஜினாமா செய்து விட்டார். அவரது பதவி விலகலுக்கு காரணம், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றது தான்.

1993-ம் ஆண்டு ஜுலை மாதம் பிரதமர் நரசிம்ம ராவ் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, தனது அரசின் 5 ஆண்டு கால பணியை நிறைவு செய்தார்.

1996-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் பிரதமராக இருந்த எச்.டி. தேவே கவுடா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். ஆனால் அவரது ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் வாபஸ் பெற்றதால், அவரது அரசு 1997-ம் ஆண்டு ஏப்ரலில் கவிழ்ந்தது.

தேவே கவுடாவை அடுத்து வந்த பிரதமர் ஐ.கே. குஜ்ரால், 1997-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி கண்டார். ஆனால் அதே ஆண்டு நவம்பரில், பெருமஇபான்மையை இழந்ததால், பதவி விலகி விட்டார்.

1996-ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய், பாராளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் முன்பே, சபையிலேயே தனது ராஜினாமாவை அறிவித்தார். ஆனால் 1998-ம் ஆண்டு மே மாதம் நடந்த வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார்.

ஆனால் அடுத்த ஆண்டில், அ.தி.மு.க. ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதால், ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் தோல்வி அடைந்து பதவி விலகினார்.

2004-ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமராக பதவி ஏற்ற போது அவருக்கு இடதுசாரிகள் ஆதரவு கொடுத்தனர். அவர்களின் ஆதரவுடன் 50 மாதங்கள் ஆட்சி முடிந்து விட்டது.

கடந்த 2 வாரங்களுக்கு முன் இடதுசாரிகள் ஆதரவை விலக்கி கொண்டதால், நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்து அதில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை மன்மோகன்சிங்குக்கு ஏற்பட்டது. இதன்படி நேற்று நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.