என் நடனத்தை கலைஞர் பாராட்டினார்- அக்ஷயா

கலைஞரின் கதை, வசனத்தில் உருவான உளியின் ஓசை படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்திருப்பவர் அக்ஷயா.இவர் ஏற்கனவே கலாபக் காதலன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உளியின் ஓசையில் வில்லியாகவும் பிறகு மனம்மாறி கதாநாயகனை தீவிரமாக காதலித்து கைப்பிடிப்பவராகவும் நடித்து இருந்தார்.

இதில் அவரது பரத நாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக பாம்பு நடனம் ஆடி அசத்தினார். அக்ஷயா நடனத்தை கலைஞர் கருணாநிதி பாராட்டியுள்ளார். இது குறித்து அக்ஷயா கூறியதாவது:-

உளியின் ஓசை படத்தில் எனக்கு பரத நாட்டிய கலைஞர் வேடம். இதற்காக பயிற்சி எடுத்து ஆடினேன். என் நடனத்தை பார்த்து கலைஞர் பாராட்டினார். அவரிடம் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது.என் கேரக்டர் சிறப்பாக அமைவதற்கு இயக்குனர் இளவேனில் காரணம். வினித் சிறந்த நடனக் கலைஞர் அவருடன் ஆடும்போது நான் சிரமப்பட்டேன். கஷ்டமான நடன அசைவுகளை வினித் எனக்கு சொல்லி கொடுத்து உதவினார். மறு அவதாரம் படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறேன். இதிலும் நல்ல கேரக்டர் கிடைத்துள்ளது. என் ஆசான் என்ற படத்திலும் நடிக்கிறேன்.இவ்வாறு அக்ஷயா கூறினார்.