பலியானது பத்தொன்பது மாணவிகள் மட்டுமா? மிகுதி மாணவிகள் எங்கே?

கடந்த 14ந் திகதி வல்லிபுனத்தில் அரச வான்தாக்குதலில் பலியான அப்பாவிப் பாடசாலைச் சிறுமிகள் ஆகப் பத்தொன்பது பேர் மட்டுமா? என தற்போது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. தாக்குதல் நடந்த இடத்தை நேற்று பார்வையிட்ட போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் தாம் 19 பாடசாலைச் சிறுமிகளின் சடலங்களை மட்டுமே பார்வையிட்டதாக தெரிவித்திருந்தனர்.

இன்று சர்வதேச கீர்த்தி பெற்ற பி.பி.சி. நிறுவனத்தினரும் கொலையுண்ட மாணவிகளின் எண்ணிக்கை பற்றி பலத்த சந்தேகம் தெரிவித்து 19 மாணவிகள் மட்டுமே பலியாகியிருந்தனரா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் இத் தாக்குதல் தொடர்பாக புலிகளின் ஊடகங்களில் இதுவரை வெளிவந்த பிரச்சாரப் படங்களில் இருபது அளவிலான இறந்த பிள்ளைகளின் உடல்களே திரும்பத் திரும்பக் காட்டப்பட்டு வருகிறது.

அத்துடன் வெளிநாட்டு அனைத்து ஊடகங்களும் தம்மால் 19பேர் இறந்ததை உறுதிப்படுத்த முடியுமெனவும் ஆனால் புலிகள் 43, 49, 61 என ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு மாதிரியாகத் தெரிவிக்கிறார்களெனவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் பொதுவானவையெனக் குறிப்பிடும் மாற்று ஊடகங்களும் (அதிரடி உட்பட) புலிகள் தெரிவித்ததையே 61பேரெனத் தெரிவித்துள்ளார்கள்.

இதேநேரத்தில், இறந்த மாணவிகளின் உடல்களை ஈமைக் கிரியைகளுக்குத் தர புலிகள் மறுத்து வருவதாக வன்னியிலிருந்து வெளிவரும் செய்திகள், உண்மையில் கொலையுண்ட மாணவிகளின் எண்ணிக்கை பற்றி பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேற்படி விமானத் தாக்குதலில் தப்பிய மாணவிகளை மேலதிக பயிற்சியளித்து போர் முனைக்கு அனுப்புவதற்காக புலிகள் ஒழித்து வைத்திருக்கின்றனரா என தற்போது பலத்த சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களுள் இதற்கு விடை தெரியும் என எதிர் பார்க்கப்படுகிறது
****************************************************

பலியானவர்கள் கட்டாய பயிற்சிக்காகக் கடத்தப்பட்ட பள்ளிச் சிறுமிகளே! பிள்ளைகளின் உடல்களை பெற்றோரிடம் கையளிக்க புலிகள் தொடர்ந்து மறுப்பு !

வன்னியில் வள்ளிபுனத்தில் இலங்கை அரசின் விமானக் குண்டுத்தாக்குதலில் பலியான அப்பாவிச் சிறுமிகள் அனைவரும் கட்டாய ராணுவ பயிற்சிக்காக பலவந்தமாகக் கூட்டிச் செல்லப்பட்டவர்களெனவும், செஞ்சோலைச் சிறுமிகள் அல்லவெனவும் பலியான பாலகரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி அரச தாக்குதலில் அவலமாகப் பலியான 14 வயது நிரம்பிய பாலகி ஒருவரின் ஜரோப்பிய நாடொன்றில் வசித்துவரும் தந்தையார் (பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் விபரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது) ஒருவர் கண்ணீருடன் எனக்கு நேரடியாகத் தெரிவித்ததாவது, மேற்படி சிறுமி கல்விகற்கும் பாடசாலையைச் சேர்ந்த 100 மாணவிகள் இரண்டுவார கட்டாய பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டனரெனவும்,

அவ்வாறு கொண்டு செல்லப்படு முன்னர் வன்னியிலுள்ள தனது மனைவி தன்னுடன் தொடர்பு கொண்டு முறையிட்டதன் பேரில் தான் தனது ஜரோப்பிய நாட்டிலுள்ள புலிகள் இயக்க முக்கியஸ்தர் ஒருவர் மூலமாக தனது மகள் ஆஸ்துமா நோயாளியென்றும், கட்டாயபயிற்சிக்கு கொண்டு செல்வதைத் தடுக்க உதவுமாறு கோரியதாகவும் ஆனால் அவர் தன்னால் எதுவும் செய்யமுடியாதென கைவிரித்து விட்டதாகவும் கண்ணீர் மல்கக் கூறினார். மேற்படி தாக்குதலில் இறந்த இன்னொரு பள்ளி மாணவியின் மாமனார் ஒருவரும் இதே கதையை எனக்குத் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 500 மாணவிகள் வரை இவ்வாறு கட்டாய ராணுவ பயிற்சிக்காகக் கொண்டு செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.

கொலையுண்ட மாணவியின் மேற்படி மாமனார் எனக்கு மேலும் தெரிவிக்கையில், இந்த இரண்டு வார பயிற்சி முடிவில் மூளைச் சலவை செய்து பல மாணவிகளை புலிகள் தங்கள் இயக்கத்திற்கு சேர்த்திருப்பார்களென மேற்படி கட்டாய ராணுவபயிற்சிக்குக் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பலர் பயந்திருந்ததாகவும், ஆனால் அவர்களால் புலிகளை எதிர்க்க முடியவில்லையெனவும் தெரிவித்தார்.

தற்போது இறந்த மேற்படி மாணவிகளின் உடல்களை தகனக் கிரியைகளுக்காக அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்க புலிகள் மறுத்து வருவதாகவும், அதற்கான காரணங்கள் எதுவும் தெரியாமல் இருப்பதாகவும் இருவரும் கவலையுடன் தெரிவித்தனர்.

இவ்அசம்பாவிதம் ஏறத்தாழ 500 மாணவிகள் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் என்ற காரணத்தால், இக்கட்டாய ராணுவபயிற்சி பற்றி மேலும் பல விடயங்கள் நிட்சயம் வெளியாகுமென இவ்விடயம் பற்றி கவலை தெரிவித்த பலரும் கருத்து தெரிவித்தனர். நன்றி:- தேனீ

?