செய்திகள்

வெளிநாடுகளின் அரசியல் கட்சிகளின் தேவைக்காக திட்டங்களை வகுக்கமுடியாது - ஜனாதிபதி

குடிமக்களின் அபிலாசைகளுக்கு இணங்கவே அரசாங்கம் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும். இதனை விடுத்து வெளிநாடுகளினதோ அல்லது அரசியல் கட்சிகளினதோ தேவைக்காக திட்டங்களை வகுக்க முடியாது என்று ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதிகளின் பிடியில் 19 ஆண்டுகள் சிறையிருந்த மடுமாதா விடுதலைபெற்று சுதந்திர கன்னியாக மீண்டும் ஆலயத்திற்கு வருகைதரவுள்ளார்.

புலிப்பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கடந்த 19 ஆண்டுகாலமாக அராஜக ஆட்சி நடைபெற்ற மடு மாதா தேவாலயமும் அதனை அண்டிய பிரதேசமும் கடந்த ஏப்ரல் 25 ந் திகதி ராணுவத்தினரால் முழுமையாக விடுவிக்கப்பட்டது.

புலிப்பயங்கரவாதிகள் மூவர் தமிழகத்தில் கைது

Motorbike_0.jpgதமிழ் நாடு பொலிஸின் கியூ பிரிவினர் புலிககளுக்கு ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் கடத்தும் குழுவினரை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ஐந்து மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றபட்டுள்ளதாக கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பயங்கரவாதத்தை ஒழிக்கும் தீர்மானங்களை மேற்கொள்ள சார்க் மாநாடு நல்ல சந்தர்ப்பம்

இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முழு உலகுக்கும் தெரிவிப்பதற்கும் முழு உலகையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி வரும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் சார்க் மாநாடு நல்லதொரு சந்தர்ப்பமாக அமையுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸ தலைமையிலான அரசினையும் ஏமாற்ற கனவு காணும் புலிகள் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தம் அறிவிப்பு

சார்க் மாநாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புலிகள் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க இருப்பதாக அறிவித்திருந்தனர்.நேற்று நள்ளிரவு வெளியாகிய இந்த அறிவித்தலில் ஜுலை 26 முதல் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையிலான பத்து தினங்கள் இந்தப் போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என புலிகளின் அரசியல்துறை தெரிவித்திருந்தது.

கிழக்கு மாகாணத்துக்கு 1226 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் நோக்கில் 1226 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் கொழும்பிற்கு வருகை, இன்று முதல் முக்கிய சந்திப்புகள்

European_parlamiant_0_0.jpgஇலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு சென்றடைந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றப் பிரதி நிதிகள் முக்கிய சந்திப்புகளை நடத்த வுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. பிரித்தானியாவின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும் தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினருமான றொபேட் எவான்ஸ் தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பை சென்றடைந்தனர்.

தமி்ழகத்தில் கைப்பற்றப்பட்ட முருகன் சிலை வெருகலம்பதி முருகன் ஆலயத்தைச் சார்ந்ததாக உரிமை கோரப்படுகிறது

Murugan_Statue.jpgVerugal_Temple_2_0.jpgVerugal_Temple_1_0.jpgVerugal_Temple_0.jpgஇலங்கையிலிருந்து கடத்தப்பட்ட முருகப்பெருமானின் சிலை தமிழகப் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதாக அண்மையில் தமிழோசையில் செய்தி வெளியானது. இந்தச் சிலையானது திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் வெருகலம்பதி முருகன் ஆலயத்திலிருந்து.

21 வருடங்கள் புலியின் கட்டுப்பாட்டிலிருந்த இலுப்பைக்கடவை படையினர் வசம் - பிரிகேடியர் அறிவிப்பு

புலிப்பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் இலுப்பைக்கடவை பகுதியினை படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். விடத்தல் தீவுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரே 10 கிலோமீற்றர் வடக்கில் முன்னேறி இலுப்பைக்கடவையினை முழுமையாக கட்டுப்பாட்டிக் கீழ கொண்டுவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இலண்டனில் கொலையுடன் தொடர்புபட்ட இலங்கை இளைஞர்கள் நால்வருக்கு ஆயுள் தண்டனை

தமிழீழப் போராட்டத்தின்மூலமாக கற்றுக்கொண்ட தமது பாடத்தினை புலம்பெயர் நாடுகளிலும் அரங்கேற்றும் அகதித் தமிழன் சமுராய் கத்தியைப் பயன்படுத்தி நபர் ஒருவரின் தலைப் பகுதியை வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். மேற்படி பயங்கரவாதிகளான தமிழ் இளைஞர் குழுவொன்றுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரு தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு போரை முன்னெடுக்கும் படையினருக்கான ஆதரவை அனைவரும் தரவேண்டும் - சரத்பொன்சேகா

இலங்கை பாதுகாப்பு படையினர் கடந்த 20 வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே யுத்தத்தை முன்னெடுக்கும் படையினருக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என சிறீலங்காத் தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி அஸ்கிரி மாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை இலங்கை விஜயம்.

இலங்கையின் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா செல்லவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிப்பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த இந்தியர் மீட்பு

பயங்கரவாதிகளான புலிகளால் சிறைப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் ஒருவரை நேற்று அவர்களிடமிருந்து மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு 28 வயது கொண்ட இந்தியர் ஒருவர் மேலும் 3 இந்தியர்களுடன் சேர்ந்து முறையான பயண ஆவணங்களுடன் இலங்கை சென்றுள்ளார். பின்னர் அவர் தன்னுடைய உறவினர்களைப்பார்ப்பதற்காக வடபகுதியில் உள்ள கிளிநொச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை புலிகள் சிறைபிடித்தனர்.

தேசிய நிகழ்வூகளில் சிங்களம் தமிழ் மொழிகளுக்கு முன்னுரிமையளிப்பது முக்கியம்

நாட்டின் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த, தேசிய நிகழ்வுகள் மற்றும் தேசிய மட்ட நூல் வெளியீடுகள் போன்ற வைபவங்களின்போது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு முன்னுரிமையளிப்பது முக்கியமானதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நில அளவைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய வரைபடத் தொகுப்பின் இரண்டாவது பதிப்பை ஜனாதிபதியிடம் கையளிக்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

கிழக்கின் ஆக்கிரமிப்பாளர்களான புதிய புலிக்கூட்டமைப்பின் ஈ.பி.டி.பி. அலுவலக புதைகுழியில் சடலம் மீட்பு

E_P_D_P_Logo.jpgபிரபாகரன் தலைமையிலான பாஸிஸப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தினை ஆக்கிரமிக்க கூட்டமைப்ப எற்படுத்திய புதிய புலிக்கூட்டமைப்புபற்றி நாம் மட்டுநகர் மாநகரசபைக்கான தேர்தலின்போது சுட்டிக்காட்டியிருந்தோம்.

பயங்கரவாதிகளின் ஆயுதக்கடத்தலுக்கான முக்கிய தளமான விடத்தல் தீவு படையினர் வசம்!

மன்னாரில் கடற்புலிகளில் முக்கிய தளம் அமைதுள்ள விடத்தல் தீவு பகுதி நேற்று காலை படையினரால் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 58 ஆவது படையணி, கமாண்டோ படையணி என்பவற்றிலுள்ள படைவீரர்கள் இணைந்து மேற்கொண்ட இராணுவ முன்னெடுப்பின்போதே இப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதி மன்னாரிலிருந்து வடக்காக 20 கி.மீ.

முல்லைத்தீவு பகுதியில் இன்று பயங்கரவாதிகளின் நிலைகள்மீது இரு விமானத்தாக்குதல்

புலிகளின் நிலைகளை இலக்கு வைத்து முல்லைத்தீவு பகுதியில் இரு விமானத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு முதலமைச்சர், திரு சந்திரகாந்தன் மற்றும் உறுப்பினர்களை திருமலையில் சந்தித்த பிரித்தானிய வெளியுறவு உதவி அமைச்சர் மல்லோ பிர

பிரபாகரன் தலைமையிலான பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு தேர்தல் ஒன்றின்மூலம் தெரிவசெய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் திரு சந்திரகாந்தன் மற்றும் மாகாண சபையின் உறுப்பினர்களை திருமலை உள்துறைமுக வீதியில் அமைந்துள்ள மாகாண சபையின் அலுவலகத்தில் பிரிட்டிஷ் உதவி வெளியுறவு அமைச்சர் மல்லோ பிரவுண் பிரபு அவர்கள் நேற்று புதன்கிழமை காலை சந்தித்தார் .இச்சந்திப்பின

வன்னிக்கு தினமும் ஓமந்தையூடாக 20 லொறிகளில் அத்தியாவசியப் பொருட்கள்

Loory_24-07.jpgஉலகிலேயே பயங்கரவாதிகளுக்கும் உணவு கொடுத்து அவர்களையும் சராசரி மனிதர்களாக நேசிப்பதன்மூலம் சமூகத்தில் இணைக்கமுடியமென கருதிச்செயற்படும் ஒரெயொரு அரசு திரு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் என்றால் அது மிகையாகாது அதற்கமைய இராணுவக் கட்டுப்பாடற்ற பயங்கரவாதிகளின் கட்டப்பாட்டில் இருக்கும் வன்னிப் பகுதிக்கு ஓமந்தை சோதனைச் சாவடியூடாக நாளாந்தம் 20 லொறிகளில் மண்ணெண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அரச

ஓமந்தை சோதனை சாவடியில் புலிப்பயங்கரவாதிகளக்கு சீருடை துணி, இரும்பு கம்பிகள் கடத்திய லொறிகள் கைப்பற்றப்பட்டுள்ளனன.

ஓமந்தை சோதனைச்சாவடியில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிசாரின் சோதனை நடவடிக்கையின் போது புலிப்பயங்கரவாதிகளுக்கு பொருட்களை கொண்டு செல்லப்பட்ட இரண்டு லொறிகளின் கூரைப் பகுதியல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீருடைத் துணி, பெட்டறிகள் மறறும் இரும்புக் கம்பிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

புலிப்பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த விடத்தல் தீவு படையினர் வசம்

மன்னாரில் கடற்புலிகளில் முக்கிய தளம் அமைதுள்ள விடத்தல் தீவு பகுதி இன்று காலை படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 58 ஆவது படையணி, கமாண்டோ படையணி என்பவற்றிலுள்ள படைவீரர்கள் இணைந்து மேற்கொண்ட இராணுவ முன்னெடுப்பின்போதே இப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதி மன்னாரிலிருந்து வடக்காக 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

புலம்பெயர் புலிப்பயங்கரவாதிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை

பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கு கடும் செய்தியை விடுத்திருப்பதாக இலங்கை ஜனாதிபதியிடம் பிரித்தானிய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. கொழும்புக்கு பயணம் செய்திருக்கும் பிரித்தானிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மலோச் பிறவுண் (Malloch Brown) பிரபு நேற்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கூலிக்கு மாரடிக்கும் புலியின் புலம்பெயர் பக்தர்கள் புலிகள் அமைப்பு ஓர் Nazis என அடையாளப்படுத்தியுள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகள் என தம்மை அழைக்கும் பிரபாகரன் தலைமையிலான பாஸிஸப் புலிகளை நாஸிக் கட்சியென புலம்பெயர் புலிகள் அடையாளப் படுத்தியுள்ளனர்.

மன்னார் விடத்தல்தீவில் நேற்று் புலிப்பயங்கரவாதிகளின் நிலைகள்மீது விமானத் தாக்குதல்

மன்னார், விடத்தல்தீவு பகுதிக்கு வடக்காக ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருந்த புலிகளின் ஒன்றுகூடும் தளம் ஒன்றின் மீது இன்று பிற்பகல் 3 மணியளவில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். இலங்கை விமானப் படையின் எம். ஐ.

அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்டவர் பிரபாகரன் –கூறுகின்றார் அனிதா பிரதாப்

1987 யூலை மாதம் 29 ந் திகதி ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய உடன்டிக்கையைத் தொடாந்த ஒரெயொரு தடவை வன்னிக் காட்டிற்குள் சென்று பிரபாகரனை சந்தித்தவர் அனிதா பிரதாப்.

Syndicate content