நடிகர் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்டவர் நடிகை நயன்தாரா. இருவரும் கடந்த சில மாதத்திற்கு முன்பு காதலித்து வந்தனர்.இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் காதல் முறிந்தது. சிம்புவை விமர்சித்து நயன்தாராவும் நயன்தாராவை விமர்சித்து நடிகர் சிம்புவும் காரசாரமாக பேட்டி அளித்து வந்தனர்.
கலைஞரின் கதை, வசனத்தில் உருவான உளியின் ஓசை படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்திருப்பவர் அக்ஷயா.இவர் ஏற்கனவே கலாபக் காதலன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உளியின் ஓசையில் வில்லியாகவும் பிறகு மனம்மாறி கதாநாயகனை தீவிரமாக காதலித்து கைப்பிடிப்பவராகவும் நடித்து இருந்தார்.
ஜப்பானில் நடக்க உள்ள திரைப்பட விழாவில் ரஜினி காந்த் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் சமயத்தில் ஜப்பானில் குசேலன் திரைப்படமும் வெளியிடப்பட உள்ளது. ரஜினிக்கு ஜப்பானில் கணிசமான ரசிகர்கள் உள்ளனர். தமிழர்கள் உட்பட தென்மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஓரளவு எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அவர்களில் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் இருப்பது மட்டுமன்றி, ஜப்பானிய மக்களிடமும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
தமிழ் நடிகர்களில் முதன்முறையாக ரஜினிகாந்துக்கு அமெரிக்காவில் பிரம்மாண்ட வினயல் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன் தெலுங்கில் கதாநாயகடு என்ற பெயரில் வெளியாகிறது. 
நடிகை மனோரமா, டைரக்டர் பாலசந்தர் ஆகியோருக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் நீண்டகாலம் நிலைத்து சாதனை படைத்து வரும் கலைஞர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க கலிபோர்னியா பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது.
பாலிவுட் பிரபலங்கள் அமீர்கான், ஷாருக்கானைத் தொடர்ந்து, நடிகை ஷில்பா ஷெட்டியும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார்.பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இனிமேல், ஆண்டு தோறும் இரண்டு திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளேன். நடிகையாக எனக்கு கிடைத்த அனுபவங்கள், திரைப்பட தயாரிப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மறக்க முடியாத சுற்றுலா என்ற தலைப்பில், உலகின் முக்கிய நகரங்களில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சியில், புவி வெப்பமயமாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட உள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 20 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக, பிரமாண்ட மேடை கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
22 பாடல்களைக் கொண்ட ஆங்கிலத் திரைப்படமான "மம்மா மியா' திரையிடப்பட்ட முதல் வாரத்தில் 5.2 மில்லியன் ஸ்ரேலிங் பவுணை வருமானமாக ஈட்டி பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை படைத்துள்ளது. மெரில் ஸ்றீப், பியர்ஸ் பிரொஸ்னன் மற்றும் கொலின் பிர்க் ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படம் வீரசாகச "ஹான்கொக்' திரைப்படத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளது.
என் காதலி, நயன்தாரா அல்ல. அவர் இனிமேல் என்னுடன் நடிக்கமாட்டார். படப்பிடிப்பின்போது அந்த அளவுக்கு அவரை டார்ச்சர் செய்து இருக்கிறேன் என்று நடிகர் விஷால் கூறினார். வல்லவன் என்ற படத்தில் சிலம்பரசனும், நயன்தாராவும் ஜோடியாக நடித்தார்கள். அதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதும், சில மாதங்களிலேயே அந்த காதல் முறிந்து போனதும் பழைய தகவல்.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் பாஷன் ஆடை திருவிழா நடைபெறுகிறது. இதில் ஜெர்மனியின் டார்ட்கள் நிறுவனத்தின் உள்ளாடையை அணிந்தபடி உயரமான அழகி அவோனா மேடையில் போஸ் கொடுத்த காட்சி. இவரது உயரம் 1.96 மீட்டர். கால்களின் நீளம் 1.34 மீட்டர்.
நடிகர் சிபிராஜ், எட்டு வருடமாக தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார். நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ். ‘ஸ்டூடண்ட் நம்பர்&1’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பிறகு ‘ஜோர்’, ‘மண்ணின் மைந்தன்’, ‘லீ’ உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கும் கடலூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வைத்தியநாதன் என்பவரது மகள் ரேவதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி, சிவகுமார் தலைமையில் பிலிம் சேம்பரில் நேற்று நடந்தது. உதவி தொகைகளை வழங்கி சூர்யா பேசியதாவது: எங்கள் வீட்டில் பிறந்த நாள் விழா, குலதெய்வ கோவில் விழா ஆண்டுதோறும் தவறாமல் நடக்கிறது என்று கூற முடியாது. ஆனால் இந்த நிகழ்ச்சி மட்டும் 29 வருடமாக தொடர்ந்து நடந்து வருகிறது.
மிஸ் யூனிவர்ஸ் உலக அழகி போட்டி வியட்நாமின் நகாதராங் நகரில் வருகிற 14-ந்திகதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள சென்ற தான்சானியா அழகி அமந்தா ஓலி, ஜப்பான் அழகி ஹிரோகோ மிமா, தாய்லாந்து அழகி சுவிந்த்ரா, பெல்ஜியம் அழகி அலிசி பொலிசிக் ஆகியோர் நீச்சல் உடையில் போஸ் கொடுக்கும் காட்சி
சிம்புவும் நயன்தாராவும் விருந்தொன்றில் சமீபத்தில் சந்தித்தனர். இதனால் இருவருக்கும் மீண்டும் காதல் துளிர் விட்டதாக பேச்சு பரவியது. ஆனால் இச்சந்திப்பை நயன்தாரா விரும்பவில்லை என்றும் திரிஷா எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி சிம்புவை வரவழைத்ததாகவும் கூறப்பட்டது.
நயன்தாரா- சிம்பு சந்திப்பு தமிழ் திரையுலகில் பரபரப்பான பேச்சாக உள்ளது. மீண்டும் காதல் துளிர் விட்டுள்ளதாக சக நடிகர்கள் கணிக்கின்றனர்.ஆனால் இச்சந்திப்பு நயன்தாராவுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றும் யாரோ திட்டமிட்டு அவர் இருப்பிடம் பற்றி சிம்புவுக்கு சொல்லி வரவழைத்ததாகவும் இன்னொரு தகவல் பரவி வருகிறது. சிம்புவை வரவழைத்தது யார்? இச்சந்திப்பினால் அவருக்கு என்ன லாபம் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இரண்டு வருட பிரிவுக்கு பின்னர் சிம்புவும், நயன்தாராவும் திடீரென்று சந்தித்து மனம் விட்டு பேசினர். சிம்புவும், நயன்தாராவும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். வல்லவன் படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்தார் நயன்தாரா. இதையடுத்து இவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் சுமத்தி பேட்டி அளித்தனர்.
கமலின் மெகாபட்ஜெட் படம் மர்ம யோகி. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படம் தயாராகிறது. சரித்திர கால படம் என்பதால் உடைகள் போர் பிரமாண்ட அரண்மனைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான பணத்தை இறைத்து அரங்குகள் அமைத்து காட்சிகளை எடுக்கின்றனர். யுத்த காட்சிகள், சுவீட்சர்லாந்தில் படமாக்கப்படுகிறது. ஹாலிவுட் நிபுணர்களை வைத்து போர் காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் பிரமாண்ட படுத்தப்படுகின்றன.
சினிமாவில் தலைகாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
குசேலன்' படத்தின் பாடல் சி.டி.யை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர். உடன் இயக்குநர்கள் கே. பாலசந்தர், பி. வாசு.
பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் தற்போது தொடர்ந்து தமிழ் சினிமா படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்மையில் ரஜினியின் குசேலன், விஜயகாந்தின் எங்கள் ஆசான், விஜய்யின் வில்லு, சுந்தர்.சி-யின் ஐந்தாம் படை என பல படங்களின் சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது.
ஜெமினிகணேசன் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினியும், வைஜயந்திமாலாவும், சாதுர்யம் பேசாதேடீ...என் சலங்கைக்கு பதில் சொல்லடீ என்று போட்டி நடனம் ஆடிய காட்சி, இன்றளவும் ரசிகர்களின் கண்களுக்குள் நிற்கிறது.
ஆசியாவிலேயே, சைவம் சாப்பிடுவோரில் கவர்ச்சிகரமானவராக பாலிவுட் நடிகர் அமிதாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விலங்குகள் நல உரிமை பாதுகாப்பு அமைப்பு, ஆசியாவில் சைவம் சாப்பிடுவோரில் கவர்ச்சிகரமான நபர்கள் யார் என்பது குறித்து ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்களில் பாலிவுட் நடிகர் அமிதாப், ஆசியாவிலேயே கவர்ச்சிகரமானவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடிகை சரோஜா தேவிக்கு திரையுலகின் வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் உள்பட நான்கு பேர் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: