கராச்சியில் நேற்று இடம்பெற்ற இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிகெட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி; குறிப்பிட்டுள்ளதாவது, அபாரமான ஆட்டத்தின் மூலம் நாட்டுக்கு கௌரவத்தை ஈட்டித்தந்த உங்களுக்கும் இலங்கை அணிக்கும் நான
இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கட் டெஸ்ட் போட்டி இன்று கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெறுகின்றது டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களைப் பெற்றுள்ள அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்னின் உலக சாதனையை முரளிதரன் இப்போட்டியில் முறியடித்து விடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 119 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இப்போட்டி நேற்று (ஒக்டோபர் 01) இலங்கையின் தம்புள்ள ரங்கிரி விiயாட்டரங்கில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
உலகக்கிண்ணத்தை மூன்றாவது தடவையாகவும் தொடர்ச்சியாக வென்ற அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதேவேளை உலகக்கிண்ணத்தில் இரண்டாவது இடத்தை பிடித் இலங்கை அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.